திடீரென்று பேரலைகள் வளர்ந்த தென்னை மரத்தின் உயரத்திற்கு வீசி, உலகில் 230,000 உயிர்களைப் பறித்த சுனாமி நினைவு நாளை நேற்று அனுசரித்தனர் தமிழக மக்கள். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமி தாக்கியதன் காரணமாக தனது குடும்பத்தினர், சொந்த பந்தங்கள், நண்பர் களை இழந்து நேற்றோடு 14 ஆண்டுகள் ஓடோடிவிட்டன. நேற்றைய நாளில் சொந்தங்களைப் பறிகொடுத்து வாடும் குடும்பத்தினர் கடற்கரையில் திதி கொடுத்து, மெழுகுவத்தி ஏந்தி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுனாமி தாக்கிய இடங்களில் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 7,000க்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். படம்: ஏஎஃப்பி

