அகமதாபாத்: ஆறடி கூந்தல் என்று காவியங்களிலும் காப் பியங்களிலும்தான் படித்திருந் தோம். அத்திபூத்தாற் போல் நீண்ட கூந்தலுடன் இருக்கும் அந்த ஒரு சிலரை நேரில் கண்டு வியக்கவும் நேரலாம். இந்த சொக்கவைக்கும் அழகின் சொந் தக்காரர்தான் நீலான்ஷி பட்டேல். வெறும் முடிதானே என்ற அலட்சியம் இன்றி, முடி வளர்த்தே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக் கிறார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி நீலான்ஷி பட்டேல். பதினொன்றாம் வகுப்பில் பயின்று வரும் நீலான்ஷி இப்போ தைக்கு 170.5 சென்டிமீட்டர் (5 அடி 7 அங்குலம்) நீளக் கூந்த லைக் கொண்டுள்ளார். இத்தாலியின் ரோம் நகருக் குச் சென்று கின்னஸ் சாதனை அங்கீகாரத்தை நேரில் பெற்றுக் கொண்ட இவர், "எல்லாம் தேவ தைக் கதைபோல இருக்கிறது," எனக் கூறி மகிழ்ந்தார்.
பி ரி ஜே ஷ் கு மா ர் - கா மி னி என்ற ஆசிரியத் தம்பதியரின் மகளான நீலான்ஷியைக் காணும் பலரும் முடியை வெட்டச் சொல்லி அறிவுரை சொல்வார்களாம். அப்போது எல்லாம் ஆத்திரம் ஆத்திரமாக வரும் எனக் கூறும் இவர், சில காலத்திற்குப் பின் வீட்டில் தமது முடிவளர்க்கும் ஆசையை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். இவரின் தாயார் திருமதி காமினி கூறுகையில், "நீலான்ஷி யின் நீளமான கூந்தலுக்கு மரப ணுக்களே காரணம். அதற்காக அழகுசாதனப் பொருட்களுக்கு அதிகம் செலவழிப்பதில்லை. வாரம் ஒருநாள் நன்றாக எண் ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பாள். அவ்வளவுதான்!" என்றார்.
170.5 செ.மீ. நீளக் கூந்தலை உடைய நீலான்ஷி 'கின்னஸ் சாதனை 2019' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். படம்: ஊடகம்

