மமன்தா உணவகம் ஏப்ரலில் மூடல்

மமன்தா உணவகம் ஏப்ரலில் மூடல்

1 mins read

கம்போங் கிளாமில் செயல்படும் மமன்தா உணவகம் 2019 ஏப்ரலில் மூடப்படும். அந்த உணவகத்துக்கு அளித்து இருந்த குத்தகையை மலாய் மரபுடமை அறநிறுவனம் முடித்துக் கொள்வதே அதற்குக் காரணம். வருந்தத்தக்க பல சூழ்நிலைகள் காரணமாக குத்தகை முடித்துக் கொள்ளப்படுவதாக இந்த அறநிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார். அந்த உணவகம் 73 சுல்தான் கேட் முகவரியில் ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.