அரசியலில் மும்மூர்த்திகள்

புதுடெல்லி: இந்தியாவில் டெல்லி அரசியலில் தென்னிந்தியர்கள் கொடி மீண்டும் பறக்க தொடங்கு வதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டின் திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திராவின் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவின் ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த சந்திரசேகர ராவ் ஆகிய மூன்று பேரும் டெல்லி அரசியலை தீர்மானிக்கத் தொடங்கி இருப்பதாக நிலவரங் கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டின் காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா, கர்நாடகாவின் தேவ கவுடா போன்ற தலைவர்கள் ஒரு காலத் தில் டெல்லி அரசியலில் கோலோச் சியதைப் போல இப்போது இந்த மூன்று தலைவர்களும் தலை எடுக்கிறார்கள் என்று கவனிப் பாளர்கள் கூறுகிறார்கள். தேசிய கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் இந்த மூன்று தலைவர் களையும் உன்னிப்பாகக் கவ னிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆந்திராவின் முதல்வர் சந்திர பாபு நாயுடு, பாஜகவுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கு முதல் முயற்சியை மேற்கொண்டார். அந்த முயற்சியில் காங்கிரஸ், திமுக போன்ற கட்சி களை ஐக்கியமாக அவர் ஒன்று படுத்தி இருக்கிறார்.

அதேவேளையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தேசிய கட்சிகளுக்குப் பெரிய மிரட்டலாக உருவெடுத்து வருகிறார். காங் கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன் றாவது அணியை உருவாக்குவது இவரின் குறிக்கோளாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டு இருக்கிறார். டெல்லியில் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் திமுக தலை வருக்கு அளித்து வரும் பெரும் மரியாதையையும் வரவேற்பையும் கண்டு பல அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!