சென்னை: இந்தியாவில் செயல்படும் விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக விமான நிலையங் களில் தமிழ் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலுள்ள எல்லா விமான நிலையங்களியிலும் இந்தி, ஆங் கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிடவேண்டும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்துமென அந்த உத்தரவு தெரிவிக்கிறது. உத்தரவு கிடைக்கப்பெறாத விமானநிலையங்களும் உள்ளூர் மொழியில் அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றும் அறிவுறுத்துப் பட்டு உள்ளது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத் தினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விமானப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை கூடி வருகிறது. இந்த அதிகரிப் பைச் சமாளிக்க விமானச் சேவை கள் பெருகி வருகின்றன. இருந்தாலும் பல விமான நிலையங்களிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அறிவிப்புகள் இடம்பெறுவதால் அந்த மொழி களைச் சரிவர புரிந்துகொள்ள முடியாத பயணிகள், பெரும் சங் கடத்திற்கு ஆளாவதாக மனக் குறை கூறப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசாங்கம் பிறப்பித்து இருக்கும் உத்தரவு நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களில் பேசப்படும் மொழிகளிலும் அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் விமான நிலையத்தில் தேவையில்லாத பதற்றங்கள் குறையும் என்றும் பயணிகளுக்கு அதிக வசதிகள் இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

