ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

1 mins read
bd95c8f3-858f-4cc1-95d3-4c4398a785a6
-

சென்னை: ஜனவரி 17ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு- நடக்கிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப் படுகிறது. அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில், ஜனவரி 15-ல் மதுரை அவனியாபுரத்திலும் ஜனவரி 16ஆ-ம் தேதி பாலமேட்டிலும் ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். (படம்: தமிழக ஊடகம்) மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளிவரும்.