டிராபிக் ராமசாமியை தாக்க அரசியல் கட்சியினர் முயற்சி

டிராபிக் ராமசாமியை தாக்க அரசியல் கட்சியினர் முயற்சி

1 mins read
6d4b0ced-9c63-474f-8dcf-030af89d3312
-

திருவையாறு: திருவையாறு கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகளை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் தாக்க முயன்ற சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்குப் புதன்கிழமை மாலை டிராபிக் ராமசாமி காரில் சென்று கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பதாகைகளைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்து அவற்றைத் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலிசாரும் பேரூ ராட்சி நிர்வாகத்தினரும் விரைந்து வந்து பதாகைகளை அகற்ற நட வடிக்கை எடுத்தனர்.

அப்போது அங்கு பதாகை களுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும் கம்புகளையும் அகற்றவேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரினார். இதனால் பேரூராட்சிப் பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த அர சியல் கட்சிப் பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி யது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியைத் தாக்க அவர்கள் முயன்றனர். உடனே அவருடன் வந்த பாது காப்பு போலிசார் டிராபிக் ராம சாமியைப் பத்திரமாக அவரது காருக்கு அழைத்துச்சென்றனர். போகும்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக சத்தம்போட்டார். தன்னைத் தாக்க முற்பட்ட வர்கள் மீதும் கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நட வடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்லப்போவதாகக் கூறிவிட்டு அவர் சென்றார்.