தினகரன்: அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது

தினகரன்: அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது

1 mins read

சென்னை: மாநிலக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்ப தாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் கலந்துகொண்டு அவர்களுடைய கோரிக் கைக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் தினகரன் பேட்டி அளித்தார். "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். "தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக் கப்போவ தில்லை. மாநில நலனை மாநிலக் கட்சிகள்தான் நிறைவேற்ற முடியும்.

"அதனால் ஒரு சில கட்சி களோடு=எங்களுடன் வரவேண் டும் என்ற உணர்வோடு இருக்கும் கட்சிகளோடு-பேசிக்கொண்டு இருக்கிறோம். இதில் குழப்பநிலை எதுவும் இல்லை. "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாரை நம்பியும் இல்லை. இது ஜெயலலிதாவின் தொண்டர் களால் தொடங்கப்பட்ட கட்சி. "கூட்டணியை நாங்கள் வேண் டாம் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் ஒருமித்த மன நிலையில் உள்ள சிலர் எங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த உணர்வு உள்ளவர்களோடு நாங்களும் பேசுகிறோம். "அவர்களோடு இறுதி முடிவு எட்டப்பட்டால் சேர்ந்து போட்டியிடு வோம். இல்லையென்றால் நாடாளு மன்றத் தேர்தலில் 40 தொகுதி களிலும் தனியாக நின்று போட்டி யிடுவோம்," என்றார் தினகரன்.