வேலூர்: வேலூரில் சிக்கனாங் குப்பம் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த பொது மக்களைத் தாக்கியதில் ஆறுபேர் காயம் அடைந்தனர். காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்த மக்கள் அங்கு குவிந் திருந்தனர். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிறுத்தை பொதுமக்களை நோக்கி பாய்ந் தது. சிறுத்தையைப் பார்த்து ஓடிய மக்களை துரத்திச் சென்று தாக்கியதில் பலர் காயம் அடைந் தனர். இது குறித்து தகவல் தெரி விக்கப்பட்டதை அடுத்து, வனத் துறையினர் விரைந்து வந்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி யில் நேற்று ஈடுபட்டனர்.
வேலூரில் ஊருக்குள் புகுந்து ஆறு பேரை தாக்கிய சிறுத்தை
1 mins read

