தக்கலை: திருமணத்துக்கு முந் தைய நாள் திடீரென மணப்பெண் விஷம் அருந்திய சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மணமகன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். தக்கலையைச் சேர்ந்த அந்த மணமகன் கப்பலில் பணியாற்றுகிறார். அவருக்கும் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. டிசம்பர் 28ஆம் தேதி (நேற்று) திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்துக்கு முந்தைய நாளன்று மணமகன் வீட்டிலிருந்து மணப் பெண்ணுக்குப் பட்டுச்சேலை மற் றும் சீர்வரிசைப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மணமகள் வீட்டை அடைந்தபோது மணமகன் வீட்டா ருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் யாருமில்லையே என அப்பகுதியில் மணமகன் வீட்டார் விசாரித்தபோது, மணமகள் திடீரென விஷம் குடித்துவிட்ட தாகவும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வருத்தமடைந்த மணமகன் வீட்டார், திருமணத்தை நிறுத்த மனமின்றி மற்றொரு உறவுப் பெண்ணை மணமகளாக்க முடிவு செய்தனர். அந்தப் பெண் ணும் அதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்று திட்டமிட்டபடி திருமணம் நடந்தேறியது.

