சென்னை: தடையை மீறி பிளாஸ் டிக் பொருட்களைத் தயாரிப்பது, விற்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் குவ ளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்கிலான பால், தயிர், எண்ணெய் உறைகள், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வும் அரசுத் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தடை உத்தரவை மீறி செயல்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண் டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். தொடர்ந்து சட் டத்தை மீறினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் வகை செய்கிறது.

