சென்னை: மது போதையில் தெருநாயைத் தாக்கிய மீனவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பெசன்ட் நகர் பகு தியைச் சேர்ந்தவர் அலெக்சாண் டர். மீனவரான இவர் கடந்த புதன்கிழமை காலை மதுபோதையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நாய் மீது அவர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் இடது கண்ணில் காயம் ஏற்பட்டதால் அந்த நாய் வலியால் துடிக்க, இக்காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள் அலெக்சாண்டர் மீது கடும் கோபம் கொண்டனர்.
இதையடுத்து புளூ கிராஸ் அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அந்த அமைப்பினர் அடிபட்ட நாய்க்கு உரிய சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகா ரின் பேரில் போலிசார் அலெக் சாண்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் நீதி மன்றக் காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அடிபட்ட நாய்க்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது நலம் பெற்று வருவதாக புளூ கிராஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம்

