நீடிக்கும் ஆசிரியர் போராட்டம்

நீடிக்கும் ஆசிரியர் போராட்டம்

1 mins read
13b98779-3444-465a-9f2b-c6a44c778ec0
-

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரி யர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 5வது நாளாக நீடித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 166 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 'சம வேலைக்குச் சம ஊதி யம்' எனும் கோரிக்கையை முன் னிறுத்தி இடைநிலை ஆசிரியர் கள் போராட்டம் நடத்தி வருகின் றனர். கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இந்த 'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்' நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத் தில் நூற்றுக்கணக்கான ஆசிரி யர்கள், ஆசிரியைகள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியைகளில் பலர் கைக்குழந் தைகளுடனும் தங்கள் கண வருடனும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் தற்போது பனி கொட்டுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் ஆசிரியர்கள் உண்ணா விரதம் இருப்பதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 180 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் அரசு மருத்துவ மைனயில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் முதற்கட்ட சிகிச்சைக் குப் பிறகு மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.