கரூர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற சுயநலத் திற்காக மத்திய அரசிடம் தமிழ கத்தின் உரிமையை அடகு வைத்துவிட்டனர் என்று முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். கரூரில் இவரது ஆதரவாளர் கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய செந்தில் பாலாஜி, நடப்பு ஆட்சியாளர்கள் தமிழக மக்க ளுக்கு விரோதமான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகச் சாடினார்.
தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழகத்தின் உரிமையை மீட்கவும் நல்லாட்சியைத் தரவும் மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தை அடமானம் வைத்த துரோகிகளின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும் என்றார். "எடப்பாடி பழனிசாமி வேண்டு மெனில் நான்கு முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால், அவரும் நானும் ஒரே நாளில்தான் அமைச்சர் களாகப் பொறுப்பேற்றோம். ஏதோ அவர்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்ததுபோல் பேசுகிறார்.
"அவர் முதல்வர் பதவியைத் துறந்துவிட்டு மக்களைச் சந் தித்து தேர்தலில் வாக்கு கேட்டு மீண்டும் முதல்வரானால், நான் அரசியலை விட்டே விலகத் தயார். இல்லையெனில் அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா?" என செந்தில் பாலாஜி சவால் விடுத்தார். இற்கிடையே கரூர் மாவட் டத்தைச் சேர்ந்த பலர் அதிமுகவில் இணையும் விழாவும் நேற்று முன்தினம் சென்னையில் நடை பெற்றது.

