மதுரை: கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில சுகாதாரத் துறைகள் தங்க ளது பதிலை 4 வாரங்களுக்குள் அனுப்ப வேண்டுமென ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த கர்ப் பிணிப் பெண் ஒருவருக்கு ரத்தக் குறைபாடு காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்டது. இதற்காக மருத்துவமனையின் ரத்த வங்கி யில் இருந்து ரத்தம் பெறப்பட்டது.
இந்நிலையில் அடுத்த சில தினங்களில் அப்பெண்ணுக்கு உடல்நலம் குன்றியதை அடுத்து சில பரிசோதனைகள் செய்யப்பட் டன. அப்போது அவருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ரத்த வங்கியில் சேமித்து வைத் தது தொடர்பாக அந்த வங்கியின் ஊழியர்கள் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை மறு ஆய்வு செய்ய வும் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றமும் இந்த விவ காரம் தொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய் துள்ளது.

