எரிவாயு உருளை வெடித்ததில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

எரிவாயு உருளை வெடித்ததில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

1 mins read

கொடைக்கானல்: முன்னாள் பஞ் சாயத்துத் தலைவர் கணேசன், 50, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மங்களம்கொம்பு கிரா மத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆவார். அவரது மனைவி மஞ்சுளா தேவி, 45. மலைப்பகுதியிலுள்ள இவர்க ளின் வீடு காட்டு யானைக்குப் பயந்து தகரக் கொட்டகையால் வேயப்பட்டும் சுற்றிலும் மரப்பலகை யால் அடைக்கப்பட்டும் இருந்தது. இந்தத் தம்பதியின் மகள் விஷ்ணு பிரியா, 10, திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் தங்கி தனியார் பள்ளியில் படித்து வந்தார். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார்.

நேற்றுக் காலை 6 மணியளவில் காப்பி போடுவதற்காக மஞ்சுளா தேவி தமது வீட்டின் எரிவாயு அடுப்பை பற்றவைத்தார். உருளையிலிருந்து எரிவாயு கசிந்திருந்தை அவர் கவனிக்கவில்லை. அதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிவாயு உருளை (சிலிண்டர்) பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதனைத் தொடர்ந்து வீடு முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. வீடு பூட்டப்பட்டு இருந்ததால் கணவன், மனைவி, மகள் ஆகிய மூவரும் அலறித் துடித்தனர். அந்த இடமே புகை மண்டல மாகக் காட்சியளித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத் தனர். ஆனாலும் அந்த முயற்சி பயனற்றுப்போனது.