பாலியல் கொடுமை: முன்னாள் எம்எல்ஏக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் கொடுமை: முன்னாள் எம்எல்ஏக்கு 10 ஆண்டு சிறை

2 mins read
bb9de6a9-c588-49af-ba80-ae9c58f3e706
-

சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு தமது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக பெரம்பலூர் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் குமார் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டது. அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் எம்பி, எம் எல்ஏக்கள் மீதான வழக்குகளைக் கையாளும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி உத்தர விட்டார். குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட ராஜ்குமான் நண் பர்கள் 4 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள முதல் தீர்ப்பு இது. 2018-12-30 06:10:00 +0800 தாயாக அரவணைத்த நாய் புதுக்கோட்டை: புதுக் கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகே உள்ள குமரமலையை சேர்ந்தவர் துரைசாமி. இவர் ஆடு ஒன்று வளர்த்து வந்தார். அந்த ஆடு குட்டியை ஈன்ற நான்காவது நாளில் இறந்து விட்டது. இதனால் அந்தக் குட்டி பால் இன்றி தவித்து வந்தது. இந்த நிலையில் துரைசாமி வீட்டில் வளர்க்கும் நாயே தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டுகிறது. இது பற்றிக் கூறிய துரைசாமி, "ஆட்டுக்குட்டியை நாய் கடித்துவிடுமோ அல்லது நாயின் பால் ஆட்டுக்குட்டிக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகுமோ என்று முதலில் யோசித்தோம். ஆனால் நாய் ஆட்டுக்குட்டியை தனது பிள்ளைபோல அரவணைத்துக் கொண்டது," என்றார்.