கறுப்புப் பண ஒழிப்பு: 1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்

கறுப்புப் பண ஒழிப்பு: 1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்

1 mins read

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் போலி நிறுவனங்கள் நிறுவனப் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க 2016 நவம் பரில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

இவற்றை வங்கிகளில் செலுத்த 50 நாள் கெடு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த பரிவர்த் தனைகளை ஆய்வு செய்தபோது கறுப்புப் பணம் மாற்றியதில் போலி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது. இதை யடுத்து போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. நிறுவனச் சட்டம் 2013ன்கீழ் தொடர்ந்து ஈராண்டுகளுக்கு மேல் வணிக நடவடிக்கையில் ஈடுபடாத நிறுவனங்கள் செயல்படாத நிறுவ னங்களாக கணக்கில் கொள்ளப் படுகின்றன.

இது தவிர ஒரே முகவரியில் பல நிறுவனங்கள் இயங்குவது போல் பதிவு செய்யப்படுவதன் மூலம் சட்டவிரோதமாக பண பரி வர்த்தனைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இந்த வகையில் கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி வரை 2.25 லட்சம் நிறுவனங்கள் நிறு வனப் பதிவேட்டில் இருந்து நீக் கப்பட்டதாக மக்களவையில் நிறு வன விவகாரத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித் தார்.

எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில், "2018-19 நிதியாண்டில் நிறுவனச் சட்டம் பிரிவு 248ன்கீழ் நடவடிக்கை எடுக்க 2,25,910 நிறுவனங்கள் அடையா ளம் காணப்பட்டன. இவற்றில் இதுவரை 1,00,150 நிறுவனங் களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது," என்றார்.