மம்தா: பாஜகவினர் ரத யாத்திரை கலவரத்தைத் தூண்டும்

மம்தா: பாஜகவினர் ரத யாத்திரை கலவரத்தைத் தூண்டும்

1 mins read

கோல்கத்தா: பாஜகவின் ரத யாத்திரை மதத்தை வளர்க்காது. கலவரத்தைத்தான் ஏற்படுத்தும் என்று மம்தா பானர்ஜி கடுமையாகத் தாக்கியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா, "இஸ்கான் அமைப்பினர் நடத்திய ரத யாத்திரையில் நான் பங்கேற்று இருக்கிறேன். இது பகவான் ஜெகநாதர் யாத்திரை. மக்களை ஒன்றுதிரட்ட நடத்தப்படும் யாத்திரையாகும். ரத யாத்திரை என்றால் மக்களைக் கொல்வது என்று பொருள் அல்ல. வன்முறை யாத்திரை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவினரின் ரத யாத்திரை கலவரத்தைத்தான் ஏற்படுத்தும். சமயத்தை வளர்ப்பதற்கான யாத்திரையாக இது இருக்காது," என்றார்.