வாராக்கடனுக்கு உடந்தையாக இருந்த 6,000 அதிகாரிகள்

வாராக்கடனுக்கு உடந்தையாக இருந்த 6,000 அதிகாரிகள்

1 mins read

புதுடெல்லி: பொதுத்துறை வங்கி களின் வாராக்கடனுக்கு உடந்தை யாக இருந்த 6,000 அதிகாரிகள் மீது கடந்த நிதி ஆண்டில் நட வடிக்கை எடுக்கப்பட்டதாக மத் திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மக்களவையில் அவர் பேசுகை யில், "கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொடர்பான விசா ரணையில் 6,049 அதிகாரிகளின் செயல்பாடுகள் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாராக்கடன் தொகையின் அடிப் படையில் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "சிலர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். ஒரு சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள் ளது. பலர் பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

"அவரவர் செய்த தவறுகளின் பேரில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தண்டனை வழங்கப் பட்டுள்ளது," என்றார் ஜெட்லி. 2016 மார்ச் நிலவரப்படி வங்கித் துறையின் வாராக்கடன் 5.66 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு மார்ச்சில் 9.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.