'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசுப் பள்ளிகளின் இடை நிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆறாவது நாளாக நீடித்தது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் கிட்டத் தட்ட 4,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெட்ட வெளியில் கடும் வெயிலையும் பனியையும் பொருட்படுத்தாது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகின் றனர். அவர்களில் சிலர் தங்க ளின் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளனர்.
இரு நாட்களுக்குமுன் அரசுத் தரப்பும் போராடிவரும் ஆசிரியர் களின் பிரதிநிதிகளும் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்ப தாக உறுதியளித்தால் போராட் டத்தைக் கைவிடத் தயார் என்றும் இல்லையேல் சாகும் வரை தங்க ளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தின் போது மயங்கி விழுந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செய லாளர் தினகரன், தேமுதிக தலை வர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் ஆசிரியர் களைச் சந்தித்து தங்களின் ஆத ரவைத் தெரிவித்தனர்.

