புதுக்கோட்டை: புதுக் கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகே உள்ள குமரமலையை சேர்ந்தவர் துரைசாமி. இவர் ஆடு ஒன்று வளர்த்து வந்தார். அந்த ஆடு குட்டியை ஈன்ற நான்காவது நாளில் இறந்து விட்டது. இதனால் அந்தக் குட்டி பால் இன்றி தவித்து வந்தது. இந்த நிலையில் துரைசாமி வீட்டில் வளர்க்கும் நாயே தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டுகிறது. இது பற்றிக் கூறிய துரைசாமி, "ஆட்டுக்குட்டியை நாய் கடித்துவிடுமோ அல்லது நாயின் பால் ஆட்டுக்குட்டிக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகுமோ என்று முதலில் யோசித்தோம். ஆனால் நாய் ஆட்டுக்குட்டியை தனது பிள்ளைபோல அரவணைத்துக் கொண்டது," என்றார்.
தாயாக அரவணைத்த நாய்
1 mins read
-

