அமைச்சர் விஜயபாஸ்கர் நீக்கப்படும் நிலை

அமைச்சர் விஜயபாஸ்கர் நீக்கப்படும் நிலை

2 mins read

சென்னை: தமிழக அமைச்சரவை யில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. தமிழக அமைச்சர்களில் அதிக குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வராக இருந்துவரும் விஜயபாஸ்கர், ஜெயலலிதா ஆண்டபோது அமைச் சரானவர். சசிகலா தயவில், அசைக்க முடியாத அமைச்சராக மாறியவர். சசிகலா முதல்வர் பதவி ஏற் பதற்காக அனைத்து பணிகளையும் செய்த இவர், ஆர்கே நகரில் தினகரன் போட்டியிட்டபோது, அவருக்காக பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பையும் ஏற்றார். அதனையடுத்து விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். அந்தச் சோதனைகள் காரண மாகவே ஆர்கே நகர் இடைத்தேர் தல் ரத்தானது. அதன் தொடர்பான வழக்கில் விஜயபாஸ்கர் பெயரே இல்லை. பிறகு குட்கா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்ற தாக விஜயபாஸ்கர் மீது குற்றச் சாட்டு எழுந்தது.

குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அமைச்சர் உள்ளிட் டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இவை காரணமாக பதவி விலகிவிடும்படி விஜயபாஸ் கரரிடம் முதல்வர் கூறினார். ஆனால் 'என்னை ராஜினாமா செய்ய சொன்னால், உங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடுவேன்' என முதல்வரையே விஜயபாஸ்கர் மிரட்டியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கூட்டணி குறித்து பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்ற போது 'விஜயபாஸ்கரை நீக்குங் கள். அப்போதுதான் அரசுக்கு ஓரளவாவது நல்ல பெயர் கிடைக் கும்' என மத்திய அமைச்சர் ஒரு வர் கூறியதை அடுத்து விஜயபாஸ் கருக்கு நெருக்கடி அதிகரித்து பதவி விலகவில்லை எனில் அவ ரைக் கழற்றிவிடுவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.