கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் கிருமி ரத்தம்: விவகாரம் விஸ்வரூபம்

கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் கிருமி ரத்தம்: விவகாரம் விஸ்வரூபம்

2 mins read

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி கிருமி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுக் கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தை நன்கொடை யாக அளித்திருந்த இளைஞர், மருத்துவமனையில் மாண்டார். அந்த இளைஞர் மனஉளைச்சல் காரணமாக எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சிசெய்தார். மதுரை மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் திடீரென வாந்தி எடுத்த அந்த இளைஞர் மாண்டுவிட்ட தாக மருத்துவமனை அறிவித்தது. இந்த நிலையில், இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என அவரது தந்தை தெரிவித்து உள்ளார். இதுபற்றி போலிசில் அவர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், மகனின் உடற் கூறு ஆய்வை மதுரை மருத்து வர்களைத் தவிர்த்து பிற மருத்து வர்களை வைத்து நடத்த வேண் டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இந்த உடற்கூறு ஆய்வை காணொளியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதுபற்றி மருத்துவமனை யிடத்திலும் அவர் மனு அளித்து உள்ளார். எய்ட்ஸ் கிருமி ரத்தம் ஏற்றப் பட்ட கர்ப்பிணி இப்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு எச்ஐவி கிருமி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தனியார் மருத்துவ மனை மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்ககு எடுக் கக் கோரி பொதுநல வழக்குத் தொடுக்கப்போவதாக வழக்கறிஞர் ஒருவர் அறிவித்து இருக்கிறார். மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு மூக்கில் அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு ரத்தம் ஏற்றப் பட்டது. அந்த ரத்தத்தில் கிருமி கலந்திருந்தது தெரியவந்தது.