பாமக பொதுக் குழுவில் 13 தீர்மானங்கள்

பாமக பொதுக் குழுவில் 13 தீர்மானங்கள்

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சியாக இருந்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி நேற்று தனது பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக தகவல்கள் தெரி வித்தன. சென்னை=-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத் தைக் கைவிடவேண்டும். விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் வேண்டும். நெய்வேலி 3-வது சுரங்கம் தோண்டும் முடிவைக் கைவிட வேண்டும் என்று சில தீர்மானங்கள் தெரிவித்தன. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவது என்றும் பாமக தீர்மானம் நிறைவேற்றியதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன