திருத்தணி -சித்தூர் சாலையில் உள்ள அமிர்தபுரம் பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வரும் நூர்மா, 32, என்பவரின் கடையில் ஐம்பொன்னால் ஆன நந்தி சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனையிட்டு ஐம்பொன்னால் ஆன இந்த நந்தி சிலையை மீட்டனர். பத்து நாட்களுக்கு முன் நான்கு பேர் சொகுசு காரில் வந்து இந்தச் சிலையை எடைக்குப் போட கேட்டதாகவும் பணத்தை வெள்ளிக்கிழமை வந்து பெற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டு சென்றதாகவும் யாரும் திரும்பி வரவில்லை என்றும் நூர்மா தெரிவித்துள்ளார். படம்: தமிழக ஊடகம்
இரும்புக்கடையில் ஐம்பொன் சிலை
1 mins read
-

