மணல் அள்ளியோரைச் சுட முயன்று மாட்டின் வாயில் சுட்டனர்

மணல் அள்ளியோரைச் சுட முயன்று மாட்டின் வாயில் சுட்டனர்

1 mins read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருட்டில் மணல் அள்ளியவர்களை நோக்கி மர்ம நபர்கள் சுட்டதில் வண்டி மாட்டின் வாயில் குண்டு பாய்ந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கெடாரில் உள்ள வீராமூர் ஏரியில் ஐந்து பேர் ஐந்து மாட்டு வண்டிகளில் இரவு நேரத்தில் மண் அள்ளிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், மணல் அள்ளியவர்களை நோக்கி துப் பாக்கியால் சுட்டதாகக் கூறப்படு கிறது.

அதனையடுத்து மணல் அள் ளியவர்கள் பயந்துபோய் பக்கத் தில் இருக்கும் கரும்புத் தோட் டத்தில் ஒளிந்துகொண்டார்கள். காலையில் பார்த்தபோது ஒரு மாட்டின் வாயில் குண்டு பாய்ந் திருந்தது அவர்களுக்குத் தெரிந் தது. இதனையறிந்து அந்த ஊர் மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட் டார்கள். அதிகாரிகள் வந்து நட வடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றார்கள்.