பெரம்பலூர்: இருசக்கர வாகனங் களில் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் வருபவர்கள் காவல் துறையினர் சொல்லும் 10 திருக் குறளை எழுதவைக்கும் நூதன தண்டனை வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த நாவுக் கரசன் என்பவர் பெரம்பலூர் நகர போக்குவரத்து காவலராக பணி யாற்றி வருகிறார். இவர், போக்குவரத்து விதி களை மீறும் வாகன ஓட்டுநர் களுக்குத் தரும் தண்டனை மூலம் பெரம்பலூர் பகுதியில் ஒரு பிரபலமாக மாறியுள்ளார். பணியின்போது தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டுநர்களைப் பிடித்து அவர்களி டம் வெற்றுத்தாள் மற்றும் பேனா வைக் கொடுத்து தான் சொல்லும் 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதச் சொல்லி தண்டனை விதித்து வருகிறார். அப்படி 10 திருக்குறளையும் சரியாக எழுதிவிட்டால் அபராதம் விதிக்காமல் தலைக்கவசம் அணி வதன் அவசியம் குறித்து அறி வுரையை மட்டும் கூறி வழியனுப்பி வைக்கிறார் நாவுக்கரசன்.
தலைக்கவசம் அணியாதோருக்கு பத்து குறட்பா தண்டனை
1 mins read
-

