20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களமிறங்குவதாக பாமக அறிவிப்பு

20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களமிறங்குவதாக பாமக அறிவிப்பு

2 mins read
b273aadc-3e08-4748-9744-1f72adb4b81c
-

கோவை: 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்து உள்ளது. பாமக செயற்குழுக் கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நடை பெற்றது. பாமக இளையர் அணித் தலை வர் அன்புமணி ராமதாஸ் கட்சியினர் மத்தியில் பேசுகையில், "2018ஆம் ஆண்டில் பாமக மக் கள் நலனுக்காக பல்வேறு போராட் டங்களை நடத்தியது. "கட்சியில் 60 லட்சம் உறுப் பினர்களைச் சேர்த்துள்ளோம்," என்றார். மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நீர்நிலைகளைப் பாதுகாக்க பாமக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. "பாமக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. பொது மக்கள், விவசாயிகள் என எல்லா தரப்பு மக்களுக்காகவும் இந்தக் கட்சி வெறும் போராட்டங்களை மட்டும் நடத்தாமல் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பாடுபட்டு வருகிறது.

"அதற்கான திட்டங்களை தயாரித்துக் கொடுக்கிறோம். "2019ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். நாடாளுமன்றத் தேர் தல் குறித்து மட்டுமே பேசுகி றார்கள். தமிழ்நாட்டில் 20 தொகுதி களுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் குறித்து பலர் மறந்து போய்விட்டனர். "20 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது. இந்தத் தேர்தல் முக்கிய தேர்தலா கும். "கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் இப் போது 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டி யிடுவோம். "இந்த 20 தொகுதிகளில் பெரம் பூர், பூந்தமல்லி, செங்கல்பட்டு, சோளிங்கர், குடியாத்தம், பாப்பி ரெட்டிப்பட்டி, திருப்போரூர், அரூர், நிலக்கோட்டை, ஆம்பூர், தஞ்சாவூர் ஆகிய 11 தொகுதிகளில் வெற் றியைத் தீர்மானிக்கும் கட்சியாக பாமக இருக்கும்.