சென்னை: சென்னை நெசப்பாக்கத் தில் வசித்து வந்த கார்த்திகேயன் என்பவர் மின்வாரியத்தில் பணி யாற்றி வந்த, கணவனை இழந்த மஞ்சுளா என்பவரைத் திருமணம் செய்தார். இருவரும் ரித்தேஷ் சாய் என்ற 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில் நாகராஜ் என்ப வருடன் மஞ்சுளாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாக ராஜ்=மஞ்சுளா இடையிலான பழக் கம் கள்ளக்காதலாக மாறியது.
இது குறித்து தமது தந்தை கார்த்திகேயனிடம் சிறுவன் ரித் தேஷ் கூறிவிட மஞ்சுளாவை கண வன் கார்த்திகேயன் கண்டித்துள் ளார். இதனையடுத்து, தம்முடன் பேசுவதை மஞ்சுளா நிறுத்தியதால் ஆத்திரமடைந்த நாகராஜ், சிறுவன் ரித்தேஷை கடத்திச் சென்று கொடூர மாகக் கொலை செய்துவிட்டார். இந்தக் கெலை வழக்கில் கடந்த மார்ச் மாதம் சிறை சென்ற நாகராஜ், 9 மாதங்கள் கழித்து பிணையில் வெளியே வந்தார்.

