விலை உயர்ந்த மல்லிகை; விலை போகாத வெங்காயம்

விலை உயர்ந்த மல்லிகை; விலை போகாத வெங்காயம்

1 mins read
c08f45c9-85fc-44cd-bd26-89afcfe8763c
-

மதுரை: புத்தாண்டு மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2,800க்கு விற்பனையானது. தொடர்ந்து பெய்துவரும் பனியால் மல்லிகைச் செடியிலேயே உதிர்ந்து வரத்து சரிந்துவிட் டது. மேலும் புத்தாண்டு தினம் என்பதாலும் தேவை அதிகம். ஏற்றுமதிக்கும் அதிகளவில் மல்லிகை கொண்டு செல்லப் படுகிறது. எனவே காலையில் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற மல்லிகை, மாலையில் ரூ.2,800க்கு உயர்ந்தது. இரு வாரங்களுக்கு முன்பு ரூ.200க்கு விற்ற மல்லிகை, திடீரென பத்து மடங்கிற்கும் மேல் விலை உயர்ந்துவிட்ட தால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சின்ன வெங்காயம் விலை போகாமல் விவசாயிகளுக்குப் பெருநஷ் டத்தை ஏற்படுத்தி வருவதால் அவர்களுக்கு இழப்பீடு கோரி கோவையில் நூதனப் போராட் டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் வெங்காயக் கடை விரித்த விவசாயிகள் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்றனர். மேலும், ஒரு கிலோ வெங் காயம் வாங்கியோருக்கு இன் னொரு கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் திரண்ட தொகையை பிரதமர் பொது நிவாரண நிதிக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.