தோக்கியோ: புத்தாண்டு தினத் திற்கு முந்திய தினத்தில் ஜப்பா னிய தலைநகர் தோக்கியோ நகரச் சாலை ஒன்றில் ஆடவர் ஒருவர் வேண்டுமென்றே தனது காரை மக்கள் கூட்டத்திற்குள் ஒட்டியதில் ஒன்பது பேர் காய மடைந்தனர். 21 வயது ஆடவர் கசுஹிரோ குசாகாபே கொலை செய்யும் நோக்கத்துடன் தக்கெஷிடா சாலையில் அவ்வாறு தனது காரை ஓட்டியதாக போலிஸ் பேச் சாளர் தெரிவித்தார். நள்ளிரவு வாக்கில் இந்தச் சம்பவம் நடந்தது. ஜப்பானில் விதிக்கப்படும் மரண தண்டனையை எதிர்த்து தான் இவ்வாறு செய்ததாக குசாகாபே போலிசாரிடம் கூறி யதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. ஆயினும் இது பற்றி குசாகாபே மேற் கொண்டு கூறவில்லை. காயமடைந்தோரை மருத்துவ அதிகாரிகள் தூக்கிக்கொண்டுச் செல்வதையும் குசாகாபேயின் கார் சேதமடைந்திருப்பதையும் ஜப்பானின் தேசிய தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டன. காயமடைந்தோரில் கல்லூரி மாணவர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இப்போது அவர் கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தோக்கியோ வாகன தாக்குதலில் 9 பேர் காயம்
1 mins read

