திருவாரூர் வேட்பாளர்: திமுகவில் தீவிர தேடல்

திருவாரூர் வேட்பாளர்: திமுகவில் தீவிர தேடல்

1 mins read
f4aad058-e3ea-4b1d-bee9-9e17c0e57d75
-

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருமுறை வெற்றி பெற்ற திருவாரூர் சட்ட மன்றத் தொகுதிக்கு இம்மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்தத் தொகுதியை கைப்பற்றுவதில் அவர் தீவிரமாக உள்ளார். மேலும் அங்கு வெற்றி பெறுவது திமுகவுக்கு கௌரவப் பிரச்சினை. இந்தத் தொகுதியில் கருணா நிதியின் குடும்ப உறுப்பினர்கள் தான் போட்டியிட வேண்டும் என் றும் தொகுதி வெளிநபரிடம் சென்று விடக்கூடாது எனவும் திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங் களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில், கருணாநிதி யின் மகள் செல்வியை திருவாரூ ரில் போட்டியிட வைக்கலாம் என கருணாநிதியின் குடும்ப உறுப்பி னர்கள் சிலர் ஸ்டாலினிடம் வலி யுறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன் அத்தொகுதியின் பொறுப்பாளராகப் பணியாற்றி இருப் பதால் அவருக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது என்ற பேச்சும் அடி படுகிறது.