தஞ்சாவூர்: தன் பணம் ரூ.15 லட்சத்தை தனது கணவர் மோசடி செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தஞ்சை காவல் நிலையம் எதிரில் தாதி ஒருவர் குந்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் கணவர் மீது நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண் அருகே உள்ள ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகள் பிரபா, 35 (படம்). "எனக்குத் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.
தற்போது நான் குவைத்தில் தாதியாகப் பணியாற்றி வருகிறேன். அங்கு பணிபுரிந்தபோது என்னுடன் பணியாற்றிய தஞ்சை மாவட்டம் குருவாடியைச் சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டேன். அப்போது அவர் தஞ்சையில் தொழில் செய்யலாம் என்றார். நான் அவரை நம்பி ரூ.15 லட்சம் கொடுத்தேன். "தற்போது அவர் உன்னுடன் வாழமுடியாது, வேறு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறேன் என்கிறார். எனது பணத்தைக் கேட்டபோது என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். காவல்துறையினர், ஆட்சியர், மாவட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்தால்தான் நான் இங்கி ருந்து கலைந்துசெல்வேன்," என்று போராட்டம் நடத்தினார்.

