புதுடெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டு வந்த அதிமுக, திமுக எம்பிக்கள் நேற்று நாடாளு மன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். காலை மாலை என எப்போது மேலவை கூடினாலும் ஒரே கூச் சலும் குழப்பமுமாகவே அவையின் நடவடிக்கைகள் இருந்தன. அதிமுக எம்பிக்கள், மன்றத் தின் மையப்பகுதிக்குச் சென்று அரசுக்கு எதிராக முழங்கினர். உறுப்பினர்களின் இந்த ஒழுங் கற்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "இது உங்கள் மாநிலத்துக்கு நல்ல செய்தியைக் கொண்டு வராது," எனக் கண் டித்தார். இருப்பினும் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டு அவை நடவடிக் கைகளுக்குக் குந்தகம் விளை வித்த அதிமுக உறுப்பினர்கள் 25 பேரை ஐந்து நாட்கள் இடை நீக்கம் செய்வதாக சுமித்ரா மகா ஜன் அறிவித்தார். அதன்படி அசோக் குமார், பரத் மோகன், அரி, மகேந்திரன், நாக ராஜன், பரசுராம், வசந்தி, அன்வர் ராஜா உள்ளிட்ட 25 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே மேகதாது பிரச் சினையை முன்வைத்து மாநிலங் களவையிலும் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிமுக, திமுக எம்பிக்களை இடைநீக்கம் செய்வதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். உறுப்பினர்களின் தொடர் அமளி யால் நாடாளுமன்ற நடைமுறை அவமதிப்புக்கு உள்ளாவதாக அவர் கூறினார். அவைத்தலைவரின் உத்தரவுப் படி திமுக உறுப்பினர்கள் கனி மொழி, திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன், விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் மன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழக கட்சி கள், இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் நடப்புக் குளிர்கால கூட்டத்தொடரில் அதி முக, திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

