காவலர்கள் உதவியுடன் பெண்கள் சாமி தரிசனம்

காவலர்கள் உதவியுடன் பெண்கள் சாமி தரிசனம்

2 mins read

திருவனந்தபுரம்: கடந்த ஏழு நாட்களாக நன்கு திட்டம் வகுத்து, அதன்படி செயல்பட்டு, குறித்த நேரத்தில் இரு பெண்களை புதன் கிழமையன்று சபரிமலை ஆலயத் துக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர் போலிஸ் காரர்கள். இந்த இரு பெண்களும் மலப் புரம் மாவட்டம், அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, 44, கோழிக் கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, 42, என்று தெரியவந்துள்ளது. இவர்கள் டிசம்பர் 24ல் சபரிமலை ஆலயத்திற்கு செல்ல முயன்றதாகவும் ஆனால் அங்கு நடந்த போராட்டத்தின் காரணமாக திரும்பிவிட்டதாகவும் கூறப்படு கிறது.

இந்த இரு பெண்களும் கோட்டயம் மாவட்டத்தில் தங்கி யிருந்ததாகவும் அந்த இடத்தை அடிக்கடி அவர்கள் மாற்றிக் கொண்டே இருந்ததாகவும் கூறப் படுகிறது. சபரிமலையில் பெண்கள் புகுந் தது காவல்துறையினர் உருவாக் கிய திட்டமிட்ட திரைக்கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பெண்கள் பம்பையில் இருந்து மலையில் நடந்து செல் லாமல் காவல்துறை வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்களுடன் கறுப்பு உடையில் பக்தர்கள் வேடத் தில் காவல்துறையினர் சென் றுள்ளனர். பதினெட்டாம் படி வழியாக ஏறாமல் பின்வாசல் வழியாகச் சென்றுள்ளனர். அங்குள்ள காவல்துறையினர் அடையாள அட்டை கேட்டபோது, பெண்களுடன் வந்த காவல்துறை யினர் எங்கள் விருந்தினர் எனக் கூறியுள்ளனர். பெண்கள் சுவாமி கும்பிடுவதை விட தாங்கள் வந்ததை காணொளியில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர்.

ஒரு பக்தர், பெண்களிடம் 'நீங்கள் யார்' எனக் கேட்டபோது நாங்கள் திருநங்கைகள் எனக் கூறியுள்ளனர் . அ வ ச ர மா க சன்னிதானத்தில் இருந்து கிளம்பி அங்கு மருத்துவ மனையில் தயாராக இருந்த மருத்துவ அவசர வாகனத்தில் ஏறி டிராக்டர் செல் லும் பாதையில் சென்றுள்ளனர். அங்கு நின்ற பக்தர்கள் சந்தே கம் எழுப்பியபோது பக்தர் ஒரு வரை காட்டுப்பன்றி தாக்கியதாக காவல்துறையினர் பொய் கூறினர். பம்பை வந்த பெண்கள் காவல் துறை பாதுகாப்புடன் வெளியூருக்குச் சென்றுவிட்டனர். இன்னும் அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. அதேபோல் சன்னிதானம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்பி போலிஸ் பாதுகாப்பில் இருந் துள்ளனர்.