ராகுல்: என் ஒரே ஆசை மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதே

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து நேற்று காரசாரமான விவாதம் நடந்தபோது, அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டு அனைவரும் திக்குமுக்காடிப் போனார்கள். ரஃபேல் ஒப்பந்தக் கோப்பு களை வைத்துக்கொண்டு கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரு மான மனோகர் பாரிக்கர், பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருவதாகவும் ராகுல் கூறியுள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர் கள் சந்திப்பில், தனக்கு ஒரே ஒரு ஆசை உள்ளதாகவும் மோடியுடன் நேருக்கு நேர் அமர்ந்து ரஃபேல் விவகாரம் குறித்து விவாதிப்பதே அந்த ஆசை என்றும் தனது விருப்பத் தைத் தெரிவித்துள்ளார் ராகுல்.

"நேற்று மோடியின் நேர்முகத் தேர்வைப் பார்த்தேன். அதில் எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைப்பது என் மீதான தனிப் பட்ட வெறுப்பில் அல்ல என்று மோடி பேசியுள்ளார். இது எனக்கு மிகவும் ஆச்சரியம் தருகிறது. மோடி எந்த உலகத்தில் சஞ் சரித்துக் கொண்டிருக்கிறார்," என கேலியாக கேட்டுள்ளார். இதற்கிடேயே தனது டுவிட்டர் பக்கத்தில் ரஃபேல் போர் விமா னக் கொள்முதல் தொடர்பாக சில கேள்விகளை ராகுல் பதி விட்டுள்ளார். "ரஃபேல் ஒப்பந்தம் தொடர் பாக நாளை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்குத் திறந்த புத்தகத் தேர்வு நடத்தப்படுகிறது. கேள்விகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன.

"126 ரஃபேல் போர் விமா னங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏன் 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டது? "ரஃபேல் போர் விமானம் ஒன்றில் விலை ரூ.560 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் பாஜக அரசு ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,600 கோடியாக மாற்றப்பட்டது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!