கடும்பனி காரணமாக அனைத்து விமானங்களும் நிறுத்தம்

கடும்பனி காரணமாக அனைத்து விமானங்களும் நிறுத்தம்

1 mins read

புதுடெல்லி: புதுடெல்லியில் நிலவும் கடும் பனி காரண மாக விமானங்களை தரை யிறக்கும் ஓடுபாதைகளோ, விமானத்தைச் செலுத்தும் சரியான இலக்கோ தெளிவாகத் தெரியாததால் புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பலரும் அவதிப்பட நேர்ந்துள்ளது. புதுடெல்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பனிப்பொழிவு காணப்படுகிறது. மோசமான வானிலை, வெளிச்சம் குறைபாடு காரணமாக நேற்று காலை முதல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 12 ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.