திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட பலம் பொருந்திய வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. அதற்கான தேடல் கடந்த வாரமே தொடங்கி விட்டது. அதிமுகவையும் திமுகவையும் முந்திக்கொண்டு தமது கட்சி யின் வேட்பாளரை தினகரன் நேற்று அறிவித்தார். திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று நேற்று தஞ்சையில் அவர் கூறினார். பெங்களூரு சிறையில் இருக் கும் அமமுக பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசிய பின்னர் காமராஜ் பெயரை அவர் அறிவித்தார். தமது கட்சி வேட் பாளருக்கு பிரஷர் குக்கர் சின் னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தினகரன் தொடுத் துள்ள வழக்கு நாளை மறுதினம் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற் கெனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக வேட் பாளராக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலை வாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டியிட விருப்ப மனு அளித்த வர்களிடம் நேர்காணல் நடத்திய பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளரை அறிவித் தார். பூண்டி கலைவாணன் போட்டி யிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் 9 பேர் மனு அளித் திருந்தனர். அவருக்கு மாவட்டத் தில் மிகுதியான செல்வாக்கு இருப்பதாகவும் அவரை வேட்பாள ராக நிறுத்தினால் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர்கள் தங் களது மனு வில் கூறியி ருந்தனர். திருவாரூர் ச ட் ட ம ன் ற உறுப்பினராக இருந்த முன் னாள் திமுக த லை வ ர் க ரு ணா நி தி கா ல மா ன தைத் தொடர்ந்து அத்தொகு திக்கு இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்டது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கருணாநிதியின் தொகுதியில் அவரது மகன் மு.க.ஸ்டாலின் அல்லது பேரன் உதயநிதி ஸ்டா லின் போட்டியிட வேண்டும் என திமுகவில் ஒருசாரார் விருப்பம் தெரிவித்து இருந்தனர். உதய நிதிக்காக அவரது திரைப்பட ரசிகர்கள் சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்நிலையில், வேட்பாளரை இறுதி செய்ய நேற்று கூடுவதாக இருந்த அதிமுக ஆட்சி மன்றக் குழுவின் கூட்டம் தள்ளி வைக் கப்பட்டுள்ளது. அநேகமாக இன்று அக்கட்சியின் வேட்பாளர் அறி விக்கப்படலாம் என்றும் ஏற் கெனவே போட்டியிட்ட பன்னீர் செல்வம் அல்லது வைத்தியலிங் கம் போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில ஒருங் கிணைப்பாளர் சாகுல் ஹமீது போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டு விட்டது. இத்தொகுதியில் பலமுனைப் போட்டி இருக்கும் என்று கணிக் கப்படுகிறது.

