பிரம்மாண்ட புத்தகக்காட்சி

பிரம்மாண்ட புத்தகக்காட்சி

1 mins read
02eaf1a2-4f8d-48db-a2f5-6554cb493b53
-

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் முதல்வர் பழனிசாமி நேற்று 42வது புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்தார். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இந்தக் காட்சியில், 820 அரங்கு கள், 1.5 கோடி புத்தகங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இம்மாதம் 20ஆம் தேதி வரை நடக்கும் இக்காட்சியில் புத்தகங்கள் 10% தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. புத்தகக்காட்சி வளாகத்தில் இலவச இணையச் சேவை, உணவகங்கள், ஏடிஎம் இயந்திரங்கள், கலை நிகழ்ச்சி கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பற்றிய புத்தகங் களுக்கு என தனிக் கூடமே அமைக்கப்பட்டு உள்ளது. அது சிறார்களை அதிகம் கவர்கிறது.