ரூ.32,000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை முடிவு

ரூ.32,000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை முடிவு

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் ரூ. 32,000 கோடி முதலீட்டில் புதிதாக 15 தொழில்துறை ஆலைகளை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. அந்த ஆலைகளை விரிவு படுத்த அவற்றின் நிர்வாகங்கள் அரசிடம் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்தது. சென்னை யில் இம்மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் அனைத்துலக முதலீட் டாளர் மாநாடு நடக்கிறது. அதனையொட்டி மாநிலத்திற் குப் பெரும் முதலீடுகளை ஈர்க்க சில மாதங்களாகவே நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலத்தில் இப்போது செயல் படும் ஆலைகளை விரிவாக்கம் செய்வதும் அவற்றில் அடங்கும். தமிழக அரசு பல நிறுவனங்களை யும் அணுகி அவற்றின் ஆலை களை புதிய முதலீட்டில் விரிவாக் கம் செய்ய நடவடிக்கைகளை மேற் கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அதற்கு 15 ஆலைகளின் நிர் வாகங்கள் இணக்கம் தெரிவித்து இருப்பதாகவும் அவற்றுக்கு ஒப் புதல் அளித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் ரூ. 32,000 கோடி முதலீடுகள் வரும் என்றும் 5,000க் கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடி­யாக வேலைவாய்ப்புகள் கிடைக்­ கும் என்றும் தொழில்துறை வட்டா­ரங்கள் தெரிவித்து இருக்கின்றன.

புதிய ஆலைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதை அடுத்து இதற்கான உத்தரவுகள் தொழில் ரீதியாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங் கேற்க 250க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் பதிவு செய்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் தெரிவித்தார். முன்னதாக அவர், பிரேசில் நாட்டு தொழில் முனைவோரைத் தலைமை செய லகத்தில் சந்தித்துப் பேசினார். மாநாட்டில் பங்கேற்கும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.