ஒரே பெண்ணைக் காட்டி பலரிடம் திருமண தரகர் மகா மோசடி

ஒரே பெண்ணைக் காட்டி பலரிடம் திருமண தரகர் மகா மோசடி

1 mins read

சேலம்: ஒரே பெண்ணின் படத்தை மணப்பெண்ணாகக் காட்டி பலரை யும் ஏமாற்றிய கண்ணன் என்ற திருமணத் தரகர் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர், இப்படி மூன்று பேரை ஏமாற்றி இருப்பதாகவும் நான் காமவரை ஏமாற்ற முயன்ற போது பிடிபட்டதாகவும் தெரியவந் துள்ளது. கண்ணன் இரண்டு மாதங் களுக்கு முன்பு சக்திவேல் என் பவரை அணுகி ஒரு பெண்ணின் படத்தைக் காட்டினார். அந்தப் பெண்ணை சக்தி வேலுக்குப் பிடித்திருந்ததால் ஒரு பவுனில் மோதிரம் மாற்றப்பட்டு கண்ணனுக்கு ரூ. 25,000 தரகுத் தொகையாக கொடுக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த மணப்பெண் மாயமாகிவிட்டார். பெண்ணின் சொந்த ஊரில் தேடியபோது அப்படி ஒரு பெண்ணே அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

இதேபோன்று விஸ்வநாதன் என்பவரும் பாலமுருகன் என் பவரும் ஏமாந்து இருப்பதாக பிறகு அம்பலமானது. அனைவரிடத் திலும் கண்ணன் தரகுத் தொகை யாக அதிகமான பணத்தைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், கண்ணன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக் குறிச்சி அருகே காரில் சுற்று வதைக் கண்ட இந்த மூவரும் கண்ணனைப் பிடித்து அடித்து போலிசிடம் ஒப்படைத்தனர். உடற்குறையாளரான கண்ண னுடன் வேறு சிலரும் இந்தச் சூழ்ச்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸ் புலன்விசாரணை நடத்திவரு கிறது. கண்ணன் மேலும் பலரை யும் தன் மோசடி வலையில் சிக்க வைத்திருக்கக்கூடும் என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.