சென்னை: தமிழ்நாட்டில் கால்நடைகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல சிறப்பு மருத்துவ வாகனம் (ஆம்பு லன்ஸ்) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள் ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது பேசிய நாங்குநேரி சட்டமன்ற உறுப் பினர் வசந்தகுமார், தன் தொகுதிக்குட்பட்ட காரியாண்டியில் புதிய கால்நடை மருத்துவ மனை அமைக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார். காரியாண்டியைச் சுற்றியுள்ள பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருப்பதால் அதனை சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை எனவும் இதற்கு அரசு ஏதாவது செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், கால்நடைகளை மருத்து வமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல புதிய மருத்துவவாகனங்கள் விரை வில் செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதி பட தெரிவித்தார்.
'விரைவில் கால்நடை மருத்துவ வாகனம் அறிமுகமாகும்'
1 mins read

