தூத்துக்குடி: ஓர் இளைஞரைத் தாக்கிய வழக்கில், விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற பணி நேரம் முடியும்வரை அங்கேயே அமர்ந்திருக்கும் நூதன தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஹரிஹரன் என்ற விருதுநகர் காவல் ஆய்வாளர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற் றியபோது, ஆவுடையபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரைச் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாகக் கூறப்பட் டது. மகேஷ் வழக்குத் தொடுத் தார். தாக்கியது உண்மை என்று விசாரணையில் தெரியவந்தது. அதை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், நீதிமன்றம் கலையும்வரை ஆய் வாளர் ஹரிஹரன் நீதிமன்றத் திலேயே அமர்ந்திருக்கவேண்டு மெனக் கூறி தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
போலிஸ்காரருக்கு தண்டனை
1 mins read

