நான்காவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையைக் காக்க உதவிய மரம்

நான்காவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையைக் காக்க உதவிய மரம்

1 mins read

மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டுக் கூடத்தில் உருண்டு விளையாடிக் கொண்டிருந்த 14 மாதக் குழந்தையான அதர்வா பார்க்கேட், திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கீழே விழுந்தான். சிறுவனின் பாட்டி எச்சரித்ததை அடுத்து, கட்டடத்தின் கீழ்த் தளத்துக்குச் சென்ற பெற்றோர் சிறுவனை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். உதடுகள், பாதம் ஆகியவற்றில் காயமடைந்ததுடன் அவனுடைய கல்லீரலும் பலமாக அடிபட்டிருப்பதாகக் கூறப்பட்டது. நான்காவது மாடியிலிருந்து கீழே விழும்போது ஜன்னலுக்கு அருகில் இருந்த மரத்தின் மீது விழுந்ததால் குழந்தை கீழே விழும்போது தாக்கம் குறைவாக இருந்ததாகவும் அது பிள்ளையின் உயிர் பிழைத்திருக்கக் காரணமாக இருக்கலாம் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லீரல் பாதிப்புக்காக சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.