ரஃபேல் விவாதம்: நிர்மலாவின் பேச்சுக்கு ராகுல் எதிர்க்கணை

ரஃபேல் விவாதம்: நிர்மலாவின் பேச்சுக்கு ராகுல் எதிர்க்கணை

2 mins read
7c91a730-b88f-45d0-b2f4-4b3e7766aafe
-

புதுடெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தில் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே கடுமை யான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சியி னரின் கேள்விகளுக்குப் பதிலளித் தார். அப்போது பேசிய அவர், ரஃபேல் விவகாரத்தில் உண்மை களைக்கண்டு காங்கிரஸ் அஞ்சு கிறது என்றும் ராணுவத்திற்கு உபகரணங்களைச் சரியான நேரத் தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் குறிப் பிட்டார்.

"நாட்டின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்வி கள் கேட்பதை நிறுத்திவிட்டு குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூற வேண்டும். உண்மைகளை மறைப் பதற்காகவே காங்கிரஸ் அமளியில் ஈடுபடுகிறது. ரஃபேல் விமா னத்தை வாங்க விருப்பம் இல்லாத தால்தான் அவர்கள் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை." என்று சாடினார். மேலும், "வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரஃபேல் விமானம் இந்தியாவுக்குக் கிடைத்துவிடும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022ஆம் ஆண்டு கிடைக்கும். ரஃபேல் ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் வெளிப் படையாகவே உள்ளன," என்றார்.

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்த வாதத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்தார். அப்போது, "ரஃபேல் விமானத்தின் விலையில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது? ரஃபேல் ஒப்பந்தத்தின் ரகசிய அம்சத் திற்குள் விமானங்களின் விலை யைச் சொல்வது இல்லை. அனில் அம்பானி ஏன் ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரப்பட்டார் என்பதே என் கேள்வி. அவரைச் சேர்ப்பது பற்றி முடிவு செய்தது யார்?" என்று கேள்வி எழுப்பிய ராகுல் ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத் தில் குற்றவியல் விசாரணை நடத்தப்படும் என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வெளியே அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.