புதுடெல்லி: ராஜ்பால் சிங் எனும் 62 வயது ஆடவர் மின்சாரத்தைத் திருடி வர்த்தகக் காரணங்களுக்காகப் பயன்படுத்தியதால் 'பிஎஸ்இஎஸ் யமுனா' மின்சார நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக் கூறப்பட்டது. மின்சாரத் திருட்டுக்காக அவரை ரூ.48.18 லட்சம் கட்டணமாகச் செலுத்துமாறு நிறுவனம் கோரியது. அதை அவர் புறக்கணித்ததை அடுத்து, அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனையும் ரூ.68.83 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட முறைப்படி மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் கோடிக்கணக்கான பணம் கட்டணமாக மின் நிறுவனங் களுக்கு வசூலாகியிருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மின்சாரத் திருட்டு: ஈராண்டு சிறை, ரூ.68 லட்சம் அபராதம்
1 mins read

