மும்பை: மும்பையைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து 1.86 கோடி ரூபாய் பணம் நூதனமான முறையில் திருடப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை இணையக் குற்றத் தடுப்பு போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தத் தொழிலதிபருக்கு கடந்த மாதம் 27 நள்ளிரவு 11:44 மணியிலிருந்து மறுநாள் அதி காலை 1:58 மணிக்குள் 6 கைபேசி அழைப்புகள் ('மிஸ்டு கால்') வந்துள்ளன. 'சிம் ஸ்வாப்' எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொழிலதிபரின் வங்கிக் கணக் கிலிருந்து 'ஓடிபி'யைப் பெற்று பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தனது கைபேசி வேலை செய்யவில்லை என்பதற்காக சேவை நிலையத்தை அணுகிய போது, மோசடி அம்பலமானது. தொழிலதிபரின் கணக்கிலிருந்து 15 கணக்குகளுக்கு 28 பணப் பரிவர்த்தனைகள் மூலம் 1.86 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியை அவரது அலுவலகத்தில் உள்ள யாரேனும் செய்திருக்கலாம் என்ற கோணத் திலும் விசாரிக்கப்படுகிறது.
ஆறு கைபேசி அழைப்புகள்; ரூ.1.86 கோடி இழப்பு
1 mins read

