புதுடெல்லி: பொருளியல் பலம் பொருந்திய நாடுகள் பலவற்றை யும்விட இந்தியாவின் பொருளி யல் கடந்த ஆண்டு வேகமாக வளர்ச்சிகண்டது. அத்தகைய வளர்ச்சி தொடர்ந்தால் உலகின் ஐந்தாவது பெரிய பொருளியல் கொண்ட நாடாக விளங்கும் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியா பிடிக்கக்கூடும் என்று 'என்டி டிவி' செய்தி குறிப்பிட்டது. ஆனால், அந்தப் பயணம் அத்தனை எளிதாக இருக்காது என்றும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நடைபெற உள்ள தேர்தல் அதற்குப் பெரும் தடையாக இருக்கும் என்றும் பொருளியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு இப் போதே நாணய மதிப்பு, பங்குச் சந்தை ஆகியவை லேசாக ஆட்டம்காணத் தொடங்கி உள்ளது என்கின்றனர் அவர் கள். மேலும், மத்திய வங்கியின் சுதந்திரத்தைக் குறைத்துமதிப் பிட்டு, அதன் உபரி மூலதனத் தைக் குறிவைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டால் அது முதலீட் டாளர்களை அதிர்ச்சிக்கு உட் படுத்தி, பொருளியல் சேதத்தை விளைவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அனைத்துலக அளவிலான பொருளியல் வளர்ச்சி 3.2 விழுக்காடாக இருந்தது. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வர்த்தகம் ,பொருளியல் ஆகிய வற்றின் தாக்கம் காரணமாக, அடுத்த ஆண்டு அது 2.9 விழுக்காடாகக் குறையக்கூடும் என்று நொமுரா ஹோல்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவற்றால், இந்தியாவின் உற்பத்தி, முதலீடு, ஏற்றுமதி போன்றவையும் பாதிக்கப்படக் கூடும் என்று அது தெரிவித்து உள்ளது. தேர்தலை முன்னிட்டு விவசாயிகளுக்கான உதவி போன்ற சலுகைத் திட்டங் களுக்காக அதிகம் செலவிட்டு வாக்காளர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டிய அழுத்தம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருப்பதாகவும் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்கை முடிவுகளைத் தேர்தல் முடிவுகள் பாதிக்கக் கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் தேர்தலை அணுக்கமாகக் கவனித்து வரு கின்றனர். தேர்தலுக்குப் பிறகு தான் இந்தியப் பொருளியலில் நிலைத்தன்மையை எதிர்பார்க் கலாம் என்பது கவனிப்பாளர் களின் கருத்தாக உள்ளது.

