புதுடெல்லி: டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் எரிவாயுக் கலன் வெடித்த விபத்தில் 7 பேர் பலியாகினர். இரண்டு மாடிகளைக்கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு எரிவாயுக் கலன் வெடித்ததால், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 வயதுக் குழந்தை உட்பட எழுவர் பலியாகியதாக போலிசார் தெரிவித்தனர். அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15க்கும் மேற்பட்டோரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் கட்டடத்தின் உரிமையாளரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஏழு பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எரிவாயுக் கலன் வெடித்த விபத்தில் எழுவர் பலி
1 mins read
-

